இலங்கைக்கு எதிராக சாதனை சதம் விளாசிய ஸ்மித்! அதிக டெஸ்ட் சதமடித்தவர்கள் பட்டியல்
அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்டில் 36வது சதத்தை பதிவு செய்தார்.
ஸ்டீவன் ஸ்மித்
காலியில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. ட்ராவிஸ் ஹெட் 21 ஓட்டங்களிலும், உஸ்மான் கவாஜா 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த லபுஷேன் 4 ஓட்டங்களில் வெளியேற, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி கூட்டணி அமைத்தனர்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) சதம் அடித்தார். இதில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். ஸ்மித் அடித்த 36வது டெஸ்ட் சதம் இதுவாகும். இதன்மூலம் டெஸ்டில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் ஸ்மித் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள்
1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 51 சதங்கள்
2. ஜேக் கல்லில் (தென் ஆப்பிரிக்கா) - 45 சதங்கள்
3. ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 41 சதங்கள்
4. குமார் சங்ககாரா (இலங்கை) - 38 சதங்கள்
5. ஸ்டீவன் ஸ்மித், ராகுல் டிராவிட், ஜோ ரூட் - 36 சதங்கள்
𝑪𝒂𝒑𝒕𝒂𝒊𝒏 𝑺𝒎𝒖𝒅𝒈𝒆 𝒊𝒔 𝒃𝒂𝒄𝒌 𝒊𝒏 𝒕𝒐𝒑 𝒇𝒐𝒓𝒎! 💯👏
— Sportskeeda (@Sportskeeda) February 7, 2025
He now holds the record for the most Test centuries in Asia by an Australian batter (7) 🇦🇺✨#SteveSmith #Tests #SLvAUS #Sportskeeda pic.twitter.com/nqVbTt2Xkn
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |