கோலியை போல் இரண்டு ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய வீரர்!
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ஸ்டீவன் ஸ்மித்
ஸ்டீவன் ஸ்மித் 136 ஒருநாள் போட்டிகளை 4722 ஓட்டங்கள் குவித்துள்ளார்
அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்டீவன் ஸ்மித் 12வது சர்வதேச ஒருநாள் சதம் விளாசியுள்ளார்.
கெய்ர்ன்ஸ் நகரில் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்தார். இது அவருக்கு சர்வதேச ஒருநாள் போட்டிகளால் 12வது சதம் ஆகும்.
மேலும் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சதம் விளாசியுள்ளார். முன்னதாக இந்தியா கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சதம் விளாசியிருந்தார்.
ஸ்டீவன் ஸ்மித் 131 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் ஸ்டீவன் ஸ்மித் 6வது இடத்தில் உள்ளார்.
PC: Getty