காலி டெஸ்டில் இமாலய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்! முதல் அவுஸ்திரேலியர் இவர்தான்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்சுகள் பிடித்த முதல் அவுஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை ஸ்டீவன் ஸ்மித் படைத்தார்.
ஸ்டீவன் ஸ்மித்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது.
இந்த டெஸ்டில் 36வது சதத்தினை பதிவு செய்த ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith), முதல் இன்னிங்சில் 131 ஓட்டங்கள் விளாசினார்.
அத்துடன் 5 கேட்சுகளைப் பிடித்தார். இதன்மூலம் டெஸ்டில் 200 கேட்சுகள் பிடித்த நான்காவது வீரர் எனும் பெருமையை பெற்றார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்சுகள் பிடித்த முதல் அவுஸ்திரேலிய வீரர் எனும் சாதனையையும் ஸ்மித் படைத்தார். இதற்கு முன்பு ரிக்கி பாண்டிங் 196 கேட்சுகளும், மார்க் வாக் 181 கேட்சுகளும் பிடித்துள்ளனர்.
டெஸ்டில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்கள்
- ராகுல் டிராவிட் (இந்தியா) - 210
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 207
- மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) - 205
- ஸ்டீவன் ஸ்மித் (அவுஸ்திரேலியா) - 200
- ஜேக் கல்லில் (தென் ஆப்பிரிக்கா) - 200
- ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 196
- மார்க் வாக் (அவுஸ்திரேலியா) - 181
- அலைஸ்டர் குக் (இங்கிலாந்து) - 175
- ஸ்டீபன் பிளெமிங் (நியூசிலாந்து) - 171
- கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) - 169
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |