நாலாபுறமும் சிக்ஸர்கள்..வாணவேடிக்கை காட்டிய ஸ்மித்..56 பந்தில் மிரட்டல் சதம்
பிக் பாஷ் லீக் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக தனது முதல் சதத்தினை பதிவு செய்தார்.
BBL தொடர்
கோஃப்ஸ் ஹார்பரில் நேற்று நடந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைகர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய சிட்னி அணியில் தொடக்க வீரர் பிலிப் ஒரு ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீவன் ஸ்மித் ருத்ரதாண்டவம் ஆடினார்.
ஸ்மித் மிரட்டல் ஆட்டம்
பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த அவர், 56 பந்துகளில் 101 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
For your viewing pleasure: all 12 glorious boundaries from Steve Smith's maiden BBL ton ?#BBL12 pic.twitter.com/QqbvGmIEMF
— KFC Big Bash League (@BBL) January 17, 2023
BBL தொடரில் 26 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஸ்மித்திற்கு இது முதல் சதம் ஆகும். ஸ்மித் ரன் அவுட் ஆனதைத் தொடர்ந்து, பின்னர் வந்த சில்க் 16 பந்துகளில் 31 ஓட்டங்களும், கிறிஸ்டியன் 8 பந்தில் 15 ஓட்டங்களும் விளாச, சிட்னி அணி 203 ஓட்டங்கள் குவித்தது.
ஆட்டநாயகன் விருது
அதனைத் தொடர்ந்து ஆடிய அடிலெய்டு அணி 144 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், சிட்னி அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிட்னி அணியின் தரப்பில் முர்பி மற்றும் பென் டார்ச்சுஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சதம் விளாசிய ஸ்மித் ஆட்டநாயகன் விருதை வென்றார்.