டெஸ்டில் இமாலய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்
Steven smith record most test catches: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த ஜோ ரூட்டின் சாதனையை ஸ்டீவன் ஸ்மித் முறியடித்தார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில், அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற ஜோ ரூட்டின் சாதனையை ஸ்டீவன் ஸ்மித் முறியடித்து வரலாறு படைத்தார்.
ஸ்டீவன் ஸ்மித்
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் அவுஸ்திரேலியாவின் மூத்த வீரரான ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) 4 கேட்சுகள் பிடித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் எனும் சாதனையை அவர் படைத்தார்.
முன்னதாக இங்கிலாந்தின் ஜோ ரூட் 220 கேட்சுகள் பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித் 223 கேட்சுகள் பிடித்து அதனை முறியடித்தார்.

டெஸ்டில் அதிக கேட்சுகள் பிடித்தவர்கள்
- ஸ்டீவன் ஸ்மித் - 223 கேட்சுகள் (126 போட்டிகள்)
- ஜோ ரூட் - 220 கேட்சுகள் (169 போட்டிகள்)
- ராகுல் டிராவிட் - 210 கேட்சுகள் (164 போட்டிகள்)
- மஹேலா ஜெயவர்த்தனே - 205 கேட்சுகள் (149 போட்டிகள்)
- ஜேக் கல்லிஸ் - 200 கேட்சுகள் (166 போட்டிகள்)
