நீரிழிவு நோயாளிகளுக்கு இனி சர்க்கரைக்கு பதிலாக இந்த சீனிதுளசி போதும்.., கிடைக்கும் நன்மைகள் இதோ
நீரிழிவு நோயை பொறுத்தவரை உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் வெள்ளை சர்க்கரை சேர்த்துக்கக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அந்தவகையில், நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக இந்த சீனித்துளசியை சேர்த்துக்கொள்வதால் உடலிற்கு ஆரோக்கியமும், உணவிற்கு இனிப்பும் கிடைக்கும்.
சீனித்துளசியின் நன்மைகள்
தேநீர் மற்றும் பிற உணவுகளுக்கு இனிப்பு சேர்க்க தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் பல ஆண்டுகளாக சீனித்துளசி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சீனித்துளசி பல பண்புகள் நிறைந்த ஒரு மருத்துவ தாவரமாகும். இதில் சர்க்கரையை விட 20 முதல் 30 மடங்கு அதிக இனிப்பு உள்ளது.
இதில் உள்ள ஹெபடோப்ரோடெக்டிவ் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கின்றன.
இந்த துளசியின் பயன்பாடு சருமத்தை மேம்படுத்துகிறது. மேலும், சுருக்கங்களை தடுக்கவும், சருமத்தை இறுக்கி, பளபளக்க உதவுகிறது.
இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிக்கும் தோலழற்சி மற்றும் காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, சீனித்துளசி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த இலைகளாகும். இந்த துளசி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் கிளைகோஜனை குளுக்கோஸாக மாற்றுவதை குறைக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
சீனித்துளசி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். முக்கியமாக இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
ஒரு கப் தேநீர் தயாரிக்க ஒன்று முதல் இரண்டு சீனித்துளசி இலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் பிற இனிப்புகளை தயாரிக்க இந்த இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து பின்னர் செய்முறையில் சேர்க்க வேண்டும்.
அவ்வாறு கொதிக்கும் போது, சீனித்துளசி இலை சாறு தண்ணீரில் கரைந்து, இனிப்பாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |