சந்தேகத்துக்குரிய நபரால் ஜேர்மன் விமான நிலையத்தில் பரபரப்பு: மொத்தமாக நிறுத்தப்பட்ட விமான சேவை
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான சேவை மொத்தமாக நிறுத்தப்பட்டது.
ஜேர்மனியின் ஹாம்பர்க் விமான நிலையத்தில், முழுமையாக சோதனை செய்யப்படாத பை ஒன்றுடன் பயணி ஒருவர் விமானத்தை நோக்கி நடைபோட்டதையடுத்து பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டது.
அவர் விமானம் எதிலாவது ஏறியிருக்கலாம் என்ற அச்சத்தில் விமான நிலையத்தில் புறப்படத் தயாராக நின்ற விமானங்கள் அனைத்தையும் நிறுத்தினார்கள் அதிகாரிகள்.
இதற்கிடையில் CCTV கமெரா மூலம் அந்த நபர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த அதிகாரிகள், உடனடியாக அங்கு விரைந்து, அவரைத் தடுத்து நிறுத்தி, அவரது உடைமைகளை முழுமையாக சோதனையிட்டார்கள்.
சோதனையில், அவரிடம் ஆபத்தை ஏற்படுத்தும் எந்த பொருட்களும் இல்லை என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் அனைத்தும் புறப்பட அனுமதியளிக்கப்பட்டது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.