துபாய் மைதானத்திற்கு வெளியே மாஸ் டான்ஸ் ஆடிய ஸ்டோனிஸ், மார்ஷ்! அனைவரையும் கவர்ந்த வைரல் வீடியோ
டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியினர் நடனமாடிய பாடி கோலாகலமாக துபாய் மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேற்று துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
உலகக் கோப்பையுடன் துபாய் மைதானத்தை விட்டு வெளியேறிய ஆஸ்திரேலிய அணியினர் மேள தளத்துடன் கௌரவிக்கப்பட்டனர்.
மேள தள இசைக்கு கோலாகலமாக ஆஸ்திரேலிய வீரர்கள் நடனமாடிய படி பேருந்தில் ஏறியது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
குறிப்பாக, மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஆட்ட நாயகன் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தங்கள் நடனத்தால் பலரையும் கவர்ந்தனர்.
துபாயில் இருக்கும் இந்திய பத்திரிகையாளர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Australia must be waking up now. So here's the Player of the Match for them - Mitchell Marsh. ??#T20WorldCupFinal pic.twitter.com/TR8TJoJy3N
— Subhayan Chakraborty (@CricSubhayan) November 14, 2021