ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் நடனமாடிய ஸ்டம்ப்! திகைத்து நின்ற வீரரின் வீடியோ
பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்சில் 2 மெய்டன்களுடன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் 86 போட்டிகளில் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க வீரரின் ஸ்டம்ப் பறந்தது.
லண்டனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 169 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 130 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக பந்துவீசினார். குறிப்பாக அவரது பந்துவீச்சில் மார்கோ ஜென்சென் கிளீன் போல்டானார்.
South Africa 147/7 at tea, leading by 106 runs.
— England Cricket (@englandcricket) September 11, 2022
அவரது ஸ்டம்ப் மண்ணில் இருந்து மேலே பறந்தது. இதனால் ஜென்சென் உறைந்து போய் நின்றார்.
John Walton/PA Images