சுவிஸில் மாஸ்க் அணிந்த நபரால் UBS கிளை ஒன்றில் குவிக்கப்பட்ட பொலிஸ்
சுவிட்சர்லாந்தில் UBS கிளை ஒன்றில் மாஸ்க் அணிந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி பல ஆயிரம் யூரோ தொகையை அள்ளிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Römerhofplatz பகுதியில் அமைந்துள்ள UBS கிளை ஒன்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
மாஸ்க் அணிந்த நபர் திடீரென்று உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளார். உயிருக்கு பயந்த ஊழியர்கள் கண் முன்னே, பல ஆயிரம் யூரோ தொகையுடன் அந்த நபர் மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த சூரிச் நகர பொலிசார், கொள்ளையிட்டு சென்ற நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகராம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.