3 நாட்கள் தொடர்ந்து இந்த கஞ்சியை குடித்து பாருங்க..வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையுமாம்!
தொப்பை கொழுப்பைக் குறைப்பது ஒரு பெரிய பிரச்சினையாகும்.
இது பலரைத் தொந்தரவு செய்கிறது. அதிகப்படியான தொப்பை கொழுப்பு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இது உயர் இரத்த சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் பல இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே குறைப்பது நல்லது. தற்போது வயிற்று கொழுப்பை குறைக்க கூடிய சூப்பரான கஞ்சி ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கைக்குத்தல் அரிசி - 1 கப்
- தண்ணீர் - 8 கப்
- சூரியகாந்தி எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- தேன் - 4 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் அரிசியைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 15 நிமிடம் அரிசியை வேக வைக்கவும். சாதம் நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்கவும்.
பின் ஒரு பிளெண்டரை எடுத்து, அதில் இந்த சாதத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அத்துடன் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து, வேண்டுமானால் சிறிது பட்டை தூள் சேர்த்துக் கலந்து கொண்டால், அரிசி பால் கஞ்சி தயார்!
இந்த அரிசி பால் கஞ்சியை தினமும் 2 டம்ளர் குடிக்க வேண்டும். குறிப்பாக இதை காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால், 2-3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- இந்த கஞ்சியைக் குடித்தால், இதய பிரச்சனைகள், பக்கவாதம் போன்றவைகளின் தாக்கத்தைத் தடுக்கலாம். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் தான் காரணம்.
- இந்த கஞ்சியினுள் உள்ள உட்பொருட்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைத் தூண்டி, உடலுக்கு ஓர் நல்ல பாதுகாப்பு கவசத்தை அளித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
- அரிசி பால் கஞ்சியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. மேலும் இதைக் குடித்தால், உடலால் உண்ணும் உணவுகளில் உள்ள வைட்டமின் சத்துக்களை எளிதில் உறிஞ்ச முடியும்.
குறிப்பு
உடல் எடையைக் குறைக்க அரிசி பால் கஞ்சியைக் குடித்தால், தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இதனால் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.