அவர்கள் வேண்டாம்: மக்களுக்கு பிரான்ஸ் பிரதமரின் கடைசிக் கோரிக்கை
பிரான்ஸ் பொதுத் தேர்தலின் பரப்புரைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பல தரப்பில் இருந்தும் தீவிர வலதுசாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
வாக்காளர்களுக்கு கடும் எச்சரிக்கை
இருப்பினும் பிரான்ஸ் வாக்காளர்கள் இந்தமுறை National Rally கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை பரிசளிக்க தயாராக உள்ளதாகவே இதுவரையான கருத்துக்கணிப்புகளில் இருந்து தெரிய வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் Gabriel Attal பிரான்ஸ் வாக்காளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீவிர வலதுசாரிகளிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது என்பது மக்களிடையே வெறுப்பு மற்றும் மோதல்களை தூண்டிவிடும் என்றார்.
இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில், நாட்டின் புதிய பிரதமராக National Rally கட்சியின் 28 வயது Jordan Bardella என்பவரே வர வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாகவே National Rally கட்சி இனவாத வருத்துக்களை முன்வைத்து அதில் ஆதாயம் தேடும் நோக்கம் கொண்டது. அதன் ஆதரவாளர்களும் இதையே செய்து வருபவர்கள்.
ஆனால் தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி என்பது, அடுத்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில் National Rally கட்சி உண்மையில் அறுதிப் பெருபான்மையுடன் வெற்றி பெறுமா என்பது தான்.
ஜூன் 9ம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் National Rally கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை கைப்பற்றியுள்ள நிலையில், தற்போதைய பிரான்ஸ் தேர்தலிலும் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது என்றே கூறப்படுகிறது.
அந்த ஒரு காரணத்தாலையே, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலை அவசர அவசரமாக அறிவித்தார். ஞாயிறன்று நடக்கவிருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் National Rally கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை அள்ளும் என்றே நம்புகின்றனர்.
உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கை
தேர்தல் பரப்புரைகள் முடிவுக்கு வரும் சில மணி நேரம் முன்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில், National Rally கட்சிக்கான ஆதரவு 36.5 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.
மேலும், National Rally கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலானோர், 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இது இவ்வாறிருக்க, தீவிர இடதுசாரிகளின் கூட்டணியும் இந்தமுறை வலுவாக உள்ளது. National Rally கட்சியை விடவும் சில புள்ளிகளே அவர்கள் பின் தங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தீவிர இடதுசாரிகள் 29 சதவிகித மக்கள் ஆதரவுடன் வலுவாக உள்ளனர்.
பிரதமர் Gabriel Attal-ன் Ensemble alliance கட்சி 20.5 சதவிகித ஆதரவுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. 577 ஆசனங்கள் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் குறைந்தது 289 ஆசனங்கள் கைப்பற்றினால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் National Rally கட்சி இந்த எண்ணிக்கையை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் உள்ளது. இதனிடையே, 2027 வரையில் தாம் ஜனாதிபதி பொறுப்பில் நீடிக்க உள்ளதாகவும் எங்கும் ஓடிவிடும் எண்ணம் இல்லை என்றும் இமானுவல் மேக்ரான் உறுதி அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |