பள்ளி நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை நிறுத்துங்கள்: புதிய பிரதமர்
கல்விக்காக அதிக நிதியை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் பொதுமக்களின் அவநம்பிக்கையை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் தாமதமான அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பள்ளி நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை நிறுத்துங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பள்ளி நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம்...
அனைத்துப் பாடசாலைகளும் தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வியில் கவனம் சிதறி பாடசாலை சூழலை அரசியலாக்கும் அபாயம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் செயல்முறை முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அண்மைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்த விடயம் தொடர்பில் சுயாதீன அறிக்கை ஒன்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், தாமதமான அனைத்து பரீட்சை பெறுபேறுகளையும் உடனடியாக வெளியிடுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |