நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டுமா? இந்த பழக்கத்தை கைவிட்டால் போதும்!
மனிதனை கொள்ளக்கூடிய ஒரு கொடிய பழக்கவழக்கம் என்றால் அது புகைப்பிடித்தல் தான். உலகம் முழுவதும் புகைப்பிடிப்பதை இன்று வரை யாரும் குறைத்ததே இல்லை.
`புகைபிடிக்கும் ஒருவர், ஒருமுறை புகைபிடிக்கும்போது தன்னுடைய வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழந்து விடுகிறார்' என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.
உயிரிழப்பைத் தடுக்கவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் 1987-ம் ஆண்டு மே 31-ம் தேதி ‘உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் அறிவிக்கப்பட்டது. இன்றுவரை உலகம் முழுவதும் 110 கோடி பேர் புகைப்பிடிக்கின்றனர். இதில் 50 சதவிகிதம் பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் 71 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் மட்டுமே உயிரிழப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றது.
சாதாரணமாக 51 லட்சம் ஆண்களும், 20 லட்சம் பெண்களும் புகைக்கு அடிமையாகி, உயிரிழக்கிறார்கள்.
இந்திய மக்கள் தொகையில் 17.8 சதவிகிதம் பேர் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.
இதில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 6 லட்சத்து 25 ஆயிரம் பேரும், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 கோடியே 36 லட்சத்து 14 ஆயிரம் பேரும் புகையிலையைத் தினமும் பயன்படுத்துகின்றனர்.
மேலும் இந்த புகையிலை பழக்கத்தை வைத்திருப்பவர்கள் எந்த நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள் என இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |