ஒரு கிராமமே எனக்கு எதிராக போர் தொடுக்கிறது! மடக்கி பிடித்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய நடிகர்
பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலம் டேனியல் ஹில் துன்புறுத்தலுக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் கேம்பிரிட்ஜ்ஷையர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரியாலிட்டி நிகழ்ச்சி பிரபலம்
Storage Hunters என்ற ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் டேனியல் ஹில் (Daniel Hill).
இவர் கேம்பிரிட்ஜ்ஷையரின் கிராமமான ஹாஸ்லிங்ஃபீல்ட் உள்ள Badcock Road ஹவுசிங் எஸ்டேட்டில் புதிதாக நிலம் வாங்கினார். அதன் பின்னர் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதாவது, அவர் ரகசியமாக நிலத்தை வாங்கி பணமாக அதை மாற்ற முயற்சிப்பதாகவும், உள்ளூர் வாசிகள் தங்கள் வீடுகளுக்கு வெளியே பார்க்கிங் செய்ய 30 ஆயிரம் பவுண்டுகள் வசூலிக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது.
கைது
இந்த நிலையில் டேனியல் ஹில் துன்பறுத்தலில் ஈடுபட்டதாகவும், தமது நடவடிக்கைகளால் பயமுறுத்துவதாகவும் குடியிருப்பாளர்கள் கூறியதைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ்ஷையர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
@BAV MEDIA
பின்னர் 14 மணிநேரம் காவலில் வைக்கப்பட்ட டேனியல் ஹில்லிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் புதிதாக வாங்கிய தனது நிலத்தை ஆறு வாரங்களுக்கு பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஹில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். மேலும் அவர் இதுதொடர்பாக கூறுகையில், 'எனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் முற்றிலும் மறுக்கிறேன். கிராம மக்கள் சண்டையில் வென்றிருக்கலாம், ஆனால் அவர்கள் போரில் வெற்றி பெற மாட்டார்கள். ஆறு வாரங்களுக்கு எனது நிலத்திற்கு செல்வதை அவர்கள் நிறுத்தியிருக்கலாம். ஆனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை, நான் திரும்பி வருவேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |