பிரித்தானியாவுக்கு ஆபத்து! வானிலை ஆராய்ச்சி மையம் புயல் தொடர்பில் பல எச்சரிக்கைகள்
புயல் தொடர்பில், வானிலை ஆராய்ச்சி மையம், பிரித்தானியாவுக்கு ஆபத்து எச்சரிக்கை உட்பட பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
ஆண்டனி புயல்
நேற்றிரவு, ஆண்டனி புயல் என பெயரிடப்பட்டுள்ள புயல் பிரித்தானியாவைத் தாக்கியது. இன்றும், அதன் தாக்கத்தால் பலத்த காற்றும் கன மழையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கைகள்
மேற்கு வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ஆம்பர் எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.
வட அயர்லாந்து மிக கன மழையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட அயர்லாந்துக்கு மழை தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
Met Office
அத்துடன், தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு காற்று தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 65 கிலோமீற்றர் வேகம் வரையில் பலத்த காற்று வீசலாம் என்றும், காற்றில் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.
PA Media