வலுக்கும் சியாரன் புயல்... பிரித்தானியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடல்
சியாரன் புயல் மணிக்கு 104 மைல் வேகத்தில் சூறைக்காற்றையும் கனமழையையும் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக வெளியான தகவலை அடுத்து பிரித்தானியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அம்பர் எச்சரிக்கை
இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையின் சில பகுதிகளில் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கையான இரண்டு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் அமுலில் உள்ளது.
Credit: Bav Media
இந்த நிலையில் தெற்கு இங்கிலாந்து மற்றும் சேனல் தீவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகள் குழந்தைகள் பாதுகாப்பு கருதி இன்று மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.
சவுத்தாம்ப்டனில் சுமார் 51 பள்ளிகள், ஐல் ஆஃப் வைட்டில் நான்கு, டெவோனில் 224, கார்ன்வாலில் 22, கிழக்கு சசெக்ஸில் 9 மற்றும் டோர்செட்டில் 10 பள்ளிகள் மூடப்பட உள்ளன.
ஜெர்சியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும், டோர்செட்டில் உள்ள கார்ன்வாலில் மேலும் 30 பள்ளிகளும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடப்படும். இதனிடையே, வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில்,
மணிக்கு 85 மைல் வேகத்தில்
புயல் மணிக்கு 70 மைல் முதல் 80 மைல் வேகத்திலோ அல்லது மணிக்கு 85 மைல் வேகத்தில் கரையைக் கடக்கக் கூடும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், கார்ன்வால் மற்றும் டெவோனில் காலை 11 மணி வரை அம்பர் எச்சரிக்கை அமுலில் உள்ளது.
Credit: Bav Media
தெற்கு கடற்கரை முழுவதும், அம்பர் எச்சரிக்கை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நீடிக்கும். வடகிழக்கு இங்கிலாந்து, ஸ்காட்லாந்தில் இன்வெர்னஸ் வரை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |