வாட்டியெடுத்த வெயிலைத் தொடர்ந்து பிரான்சை புரட்டி எடுத்த புயல்
A storm has felled trees, smashed windows and sent people flying in France: பிரான்சில் வீசிய புயல் ஒன்றால் வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்க, மரங்கள் சாய, மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
கடும் வெயிலால் அவதியுற்றுவந்த ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை, தற்போது புயல் புரட்டி எடுத்து வருகிறது.
பிரான்சை புரட்டி எடுத்த புயல்
அதீத வெப்பம் காரணமாக பிரான்சில் இதுவரை 7,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தற்போது வானிலை மாறிவிட்டது. விடயம் என்னவென்றால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும் என எதிர்பார்த்தால், எதிர்பாராதவிதமாக புயல் ஒன்று புரட்டி எடுத்துள்ளது.

வியாழனன்று பிரான்சின் சில பகுதிகளை தாக்கிய புயல் ஒன்று மக்களுக்கு கடும் அச்சத்தை உருவாக்கியது.
Seine-et-Marne என்னுமிடத்தில் மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்றும், மழையும், கல்மழையும் ஒன்று சேர்ந்து வாகன ஓட்டிகளை கலங்கடித்தன.

கார் மற்றும் ரயில் கண்ணாடிகள் கல்மழையால் உடைந்து சிதற, மரங்கள் சாய்ந்து கார்கள் மீது விழ, மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்பு பிரான்சில் மட்டுமல்ல, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திலும் இதே நிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |