Darragh புயல்: பிரித்தானியாவில் 86,000 வீடுகள் இருளில் மூழ்கின
பிரித்தானியாவை Darragh புயல் என்னும் புயல் துவம்சம் செய்துவரும் நிலையில், இங்கிலாந்திலும், ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாட்டிலும் பல ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன
86,000 வீடுகள் இருளில் மூழ்கின
பிரித்தானியாவை Darragh புயல் என்னும் புயல் துவம்சம் செய்துவரும் நிலையில், இங்கிலாந்திலும், ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாட்டிலும் 86,000 வீடுகள் மின்சார விநியோகம் இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளதாக பிரித்தானியாவின் ஆற்றல் வழங்கல் அமைப்பான The Energy Networks Association தெரிவித்துள்ளது.
அயர்லாந்தில், சுமார் 400,000 வீடுகள் மின்சாரம் தடைபட்டுள்ளதால் இருளில் மூழ்கியுள்ளன.
வட அயர்லாந்தில் புயல் காரணமாக, ரயில்கள் மற்றும் சில பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
46,000 வீடுகள் வட அயர்லாந்தில் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இன்று, சனிக்கிழமை இரவு 9.00 மணி வரை ஆம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |