பிரித்தானியாவை கடுமையாக தாக்க இருக்கும் சூறைக்காற்று: புயலுக்கு பெயரிட்ட மெட் அலுவலகம்
இந்த வாரம் பிரித்தானியாவை தாக்க உள்ள புயல் காற்றுக்கு மெட் அலுவலகம் பெயரிட்டுள்ளது.
இயோவின் புயல்
மெட் அலுவலகம், இந்த வாரம் பிரித்தானியா முழுவதும் வலுவான காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும் இந்த புயல் காற்றுக்கு “இயோவின்”(Storm Eowyn) என்று பெயரிட்டுள்ளது.
புயல் இயோவின் குறைந்த அழுத்த அமைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை, "மிகவும் வலுவான" காற்றை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#StormÉowyn has been named and is forecast to bring strong winds to much of the UK on Friday and into Saturday.
— Met Office (@metoffice) January 21, 2025
Stay #WeatherAware ⚠️ pic.twitter.com/XCphCgyj2Z
உள்நாட்டில் 60 மைல் வேகத்திலும் கடலோரப் பகுதிகளில் அதிர்ச்சியூட்டும் 80 மைல் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் இயோவின் பிரித்தானியாவின் வடமேற்குப் பகுதியை அல்லது அதற்கு அருகிலுள்ள பகுதிகளைத் தாக்கி, நாட்டின் பரந்த பகுதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி இங்கிலாந்தில், ழக்கு மிட்லாண்ட்ஸ், மேற்கு மிட்லாண்ட்ஸ், லண்டன் & தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு, யார்க்ஷயர் & ஹம்பர் பகுதிகளை புயல் தாக்கும் என்றும், இதனுடன் வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் டெய்ஸைட் & ஃபைஃப், கிராம்பியன், ஹைலேண்ட்ஸ் & ஈலியன் சியார், வடக்கு அயர்லாந்து, ஆர்கனி & ஷெட்லேண்ட், தென்மேற்கு, லோதியன் எல்லைகள் ஆகியவற்றையும் புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த காற்றுகள் கணிசமான அபாயங்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
⚠️ Yellow weather warnings for wind have been issued across much of the UK through Friday and into Saturday in association with #StormÉowyn ⚠️
— Met Office (@metoffice) January 21, 2025
Latest info 👉 https://t.co/QwDLMfS950
Stay #WeatherAware⚠️ pic.twitter.com/ulQBIsdleW
புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்
கட்டிடங்கள் சேதமடையக்கூடும், மற்றும் மரங்கள் விழுவது மற்றும் பறக்கும் குப்பைகள் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரிக்கலாம்.// மின்சார விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சாலை, ரயில், விமான மற்றும் கப்பல் போக்குவரத்து கடுமையான பாதிப்புகளை சந்திக்கக்கூடும்.
சனிக்கிழமை காற்று சற்று தணியும் என்று எதிர்பார்க்க பட்டாலும், வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளுக்கு மஞ்சள் காற்று எச்சரிக்கை தொடர்கிறது.
அக்டோபர் இறுதியில் இருந்து பிரித்தானியாவை பாதித்த ஐந்தாவது பெயரிடப்பட்ட புயல் இயோவின் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |