கோரத்தாண்டவமாடிய Malik புயல்: இதுவரை நால்வர் பலி
வடக்கு ஐரோப்பாவை தாக்கிய Malik புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, டென்மார்க், வடக்கு போலந்து மற்றும் ஜேர்மனி நாடுகளை இந்த புயல் தாக்கியது.
இந்த புயலால் கடந்த ஞாயிறன்று வடக்கு ஐரோப்பாவில் கடுமையான ராட்சர அலைகள் எழுந்தன, இதனால் பொதுப் போக்குவரத்து மூட வேண்டிய கட்டாய சூழல் உருவானது.
இதில் Germany யில் பலத்த காற்று வீசியதால் Election Poster இல் ஒருவர் அடிபட்டு உயிரிழந்துள்ளார் மற்றும் அவருடன் வந்திருந்த இன்னொரு நபரும் காயமடைந்துள்ளார்.
Scotland இல் மணிக்கு 160 Kilometres வேகத்தில் காற்று வீசியதால் Aberdeen இல் மரம் விழுந்ததில் பரிதாபமாக 60வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Central England இல் ஒன்பது வயது சிறுவன் மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானான்.
பலத்த புயல் காரணமாக England முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 13,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.