உயிர் பலி வாங்கிய Éowyn புயல்: பிரித்தானியாவில் இருளில் மூழ்கிய ஆயிரக்கணக்கான வீடுகள்
பிரித்தானியாவையும் அயர்லாந்தையும் Éowyn புயல் துவம்சம் செய்து வருகிறது.
அயர்லாந்தில், புயலால் மரம் ஒன்று கார் ஒன்றின் மீது விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பிரித்தானியாவை துவம்சம் செய்துவரும் புயல்
Éowyn புயல் ஒரு உயிரை பலி வாங்கியுள்ள நிலையில், பிரித்தானியாவிலும் அயர்லாந்திலும் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்தடை காரணமாக இருளில் மூழ்கியுள்ளன.
வட அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளிலும் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5.00 மணி வரை இரண்டு சிவப்பு எச்சரிக்கைகள் அமுலில் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 100 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசிவருவதால் மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானியாவில், ஐந்தில் ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது, ஸ்கொட்லாந்தில் ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
புயல் கட்டிடங்களை சேதப்படுத்தியுள்ளதுடன் மரங்களும் விழுதுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்திலும், வட அயர்லாந்திலும், வடக்கு இங்கிலாந்திலும் ஆம்பர் எச்சரிக்கை அமுலில் உள்ளது, அடுத்த சில நாட்களுக்கு பிரித்தானியா முழுமைக்கும் மஞ்சள் எச்சரிக்கையும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியிலும் பயணங்களுக்கு இடையூறு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |