பிரான்ஸ் முழுமைக்கும் விடுக்கப்பட்டுள்ள புயல் எச்சரிக்கை
பிரான்ஸ் வானிலை ஆராய்ச்சி மையம் 25 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்சில் இன்று மதியத்திற்கு மேல் வெப்பநிலை உச்சத்தைத் தொடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், கடுமையான புயலும் அதைத் தொடர இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மேற்கிலுள்ள 25 மாவட்டங்களுக்கு புயல் தொடர்பில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை என்பது இரண்டாவது மட்ட எச்சரிக்கை ஆகும். மேலும், பெருமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது வானிலை ஆராய்ச்சி மையம்.
பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்லவேண்டாம் என்றும், மரங்களின் அருகில் செல்லவேண்டாம் என்றும், திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால், நதியோரங்களுக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக 40 முதல் 50 மில்லிமீற்றர் வரை மழை கொட்டித்தீர்க்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள வானிலை ஆராய்ச்சி மையம், நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தவிருக்கும் இந்த புயல், இரவு நேரத்தில் சற்று வலுவிழக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு - https://www.thelocal.fr/20210616/storm-warnings-issued-across-france-with-heatwave-set-for-abrupt-end/