மசாலாவில் தொடங்கி தங்கத்தில் முடிந்த கதை! ரூ.27,000 கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்
ரூ.27,000 கோடி மதிப்புள்ள மலபார் கோல்டு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய எம்.பி.அகமத்தின் கதையை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
யார் இவர்?
ஒரு சிறிய அளவில் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் தான் M. P. அகமத். தற்போது இவர், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஃபவுண்டரான உள்ளார். இந்த இலக்கை அடைவதற்கு பல்வேறு கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.
1978 ஆண்டு, 20 வயதான அகமத் தன்னுடைய முதல் தொழிலாக மசாலா பொருள்களை தேர்வு செய்து, அதனை விற்பனை செய்து வந்தார். இவர், கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த தொழிலை துவங்கினார்.
அப்போது, கருப்பு மிளகு, மல்லி விதைகள் மற்றும் தேங்காய் போன்றவற்றையும் விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால், இந்த தொழிலில் நாம் சாதிக்க முடியாது என்பதை அகமத் உணர்ந்துள்ளார். இதன்பின்னர், மசாலாவை நிறுத்திவிட்டு மார்க்கெட்டை ஆய்வு செய்தார்.
தங்கத்தில் முதலீடு
இதனைத்தொடர்ந்து, சொந்த ஊரான மலபாரில் தங்கத்தில் முதலீடு மற்றும் விழாக்காலங்களில் தங்கத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை அகமத் பார்த்துக் கொண்டார். அதன்பிறகு தான் தங்க நகை தொழிலில் முதலீடு செய்ய வேண்டும் என்று உறுதி செய்து, மலபார் என்ற பிராண்ட் பெயரில் தரமான தங்க நகையை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
இந்த தொழிலை துவங்குவதற்கு தனது ஏழு உறவினர்கள் கொடுத்த பண உதவி மூலம் ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல், சொத்துக்களை விற்று 50 லட்சம் ரூபாய் பெற்று, முதலீடு செய்யலாம் என்ற துணிச்சலான முடிவையும் எடுத்தார்.
ரூ.27,000 கோடி மதிப்பு
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் துவக்க விழா 1993 -ம் ஆண்டு கோழிக்கோடு பகுதியில் 400 சதுர அடி அளவில் நடைபெற்றது. கோல்டு பார்கள் வாங்கி சொந்தமாக நகை தயாரிக்க வேண்டும் என்ற உத்தியை கையான்ட அகமத் வெற்றியை தடம் பதித்தார்.
பின்பு, தனித்துவமான டிசைன் மற்றும் கலெக்ஷன்களை உருவாக்கி வாடிக்கையாளர்களை கவர்ந்தார். இதனைதொடர்ந்து, திருர் மற்றும் தெலிச்சேரி ஆகிய இரண்டு பகுதிகளில் கிளைகளை துவங்கினார். அதுமட்டுமல்லாமல், கோழிக்கோடு பகுதியில் 400 சதுர அடி அளவில் தொடங்கிய கடையை 2015 -ம் ஆண்டு 4000 சதுர அடி அளவில் புதுப்பித்தார்.
1999 -ம் ஆண்டு BIS முத்திரை பதித்த நகையை விற்பனை செய்யும் போது , மக்களுக்கு இதன் மீது நம்பிக்கை வந்தது. பின்பு, 2011 -ம் ஆண்டு ரியாத்தில் தனது 50வது ஸ்டோரை திறந்து மொத்த மதிப்பை ரூபாய் 12,000 கோடியாக மாற்றினார்.
அடுத்ததாக, 2013 -ம் ஆண்டு இந்தியா மற்றும் அரேபிய நாடுகள் உட்பட 7 நாடுகளில் 103 மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஸ்டோர்களை உருவாக்கி தற்போதைய ரூ.27,000 கோடியாக மாற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |