சுவிஸ் சமையல் கலை நிபுணர் ஒருவர் உருவாக்கியுள்ள வித்தியாசமான கேக்: ஒரு வைரல் வீடியோ
சுவிஸ் சமையல் கலை நிபுணர் ஒருவர் உருவாக்கியுள்ள கேக் ஒன்றைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
Amaury Guichon, விதவிதமாக கேக் செய்து அசத்தும் ஒரு சமையல் கலைஞர். தற்போது டிராகன் வடிவில் அவர் ஒரு கேக்கை உருவாக்கியுள்ளார்.
அச்சு அசலாக டிராகன் போலவே காணப்படும் அந்த கேக்கைக் காட்டும் வீடியோ ஒன்றை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த வீடியோவை 12.2 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளார்கள். அது 7 இலட்சம் லைக்குகளையும் பெற்று வைரலாகியுள்ளது.
இதற்கிடையில், உணவு விரும்பிகள் பலர் அந்த கேக்கை சுவைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அந்த கேக்கின் நினைவாக ஒரு துண்டையாவது வைத்திருங்கள் என்று பலரும் Guichonக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.