திருவண்ணாமலையில் உலாவும் வினோத உருவம்.., தமிழக அரசு வெளியிட்ட பதிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மர்ம உருவம் திரிந்து வருவதாக செய்திகள் பரவி வருகிற நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மர்ம உயிரினம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே கீழ்வலசை என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான விலங்கு உலவுவதாக பகீர் தகவல் பரவியது.
ஆட்டின் தலை மற்றும் 4 விரல்களை கொண்ட கால்களுடன் சுற்றிவருவதாக செய்திகள் வெளியானது.
திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று பரவி வரும் இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் பதிவு வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.
வெளியிட்ட பதிவு
தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் இந்த செய்தி முற்றிலும் ஒரு வதந்தி.
நீளமான நகங்கள், 4 விரல்களை கொண்ட கால்கள் மற்றும் ஆட்டின் தலையுடைய மனித உருவிலான வித்தியாசமான உயிரினத்தின் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது 2011ஆம் ஆண்டு கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படமாகும்.
அதை பகிர்ந்து திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |