முகம் பொலிவாக இருக்க ஸ்ட்ராபெர்ரி ஸ்கிரப்: தயாரிப்பது எப்படி?
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது ஸ்ட்ராபெர்ரி பழம்.
இதில் இருக்கும் வைட்டமின் சி சரும பாதிப்பை குறைகிறது. மேலும் இது சருமப்பொலிவை தக்க வைக்க பயன்படுகிறது.
சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு மட்டும் இல்லாமல் சரும சுருக்கத்தை குறைத்து இளமையாக இருக்க உதவி செய்கிறது.
இத்தனை குணமிக்க ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்தி ஸ்கிரப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- ஸ்ட்ராபெர்ரி - 4
- பிரவுன் சுகர் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு கழுவி அதில் இருக்கும் காம்பு மற்றும் நடுவில் இருக்கும் தண்டை அகற்ற வேண்டும்.
அதன்பிறகு துண்டு துண்டாக நறுக்கி ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இத்துடன் பிரௌன் சுகர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்ளோ தான் சருமத்தை அழகாக பராமரிக்கும் ஸ்கிரப் தயார்.
பயன்படுத்தும் முறை
இந்த ஸ்கிரப்பை சுத்தமான சருமத்தில் பயன்படுத்தினால் தான் வித்தியாசம் நன்றாக இருக்கும். எனவே, முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.
அதன் பின்னர் தயார் செய்த ஸ்கிரப்பை முகத்தில் அப்ளை செய்து விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
அடுத்து 10 நிமிடம் கழித்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.
இதனை வாரத்திற்கும் இரண்டு முறை செய்து வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |