Street food சாப்பிடனுமா? அப்போ இந்த இடத்துக்கு போங்க போதும்
என்னதான் 5ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டாலும் வீதிக்கு இறங்கி வீதியோர கடைகளில் சாப்பிடுவது போன்று வருமா?
ஆம். சாலையோர உணவுகள் என்றாலே அதற்கு பிரபல்யமாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும் தான். அது சாப்பிடுவதற்காகவே சிலர் இந்தியாவிற்கு செல்வதற்கு ஆசைபடுவதும் உண்டு.
இந்த கடைகளானது இரவு நேரங்களிலேயே அதிகமாக காணப்படும். இந்தியாவில் மற்றும் தாய்லாந்தில் தான் இந்த கடைகள் இருகின்றது என்று நினைக்கூடாது. இலங்கைவாழ் மக்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பாக இருப்பது தான் புதுக்கடை. இங்கு சென்றால் போதும் குறைந்த விலையில் ருசியான Street food சாப்பிடலாம்.
ஆகவே இலங்கைக்கு வருபவர்களை இங்கு சென்று தனது நாக்கை ருசி பார்க்க செய்யலாம். அங்கு முக்கியமாக காணப்படும் உணவுகள் மற்றும் இது கொழும்பில் எங்கு காணப்படுகின்றது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
பாண் கொத்து, பிட்டு
கொத்து பொதுவாக ரொட்டியிலான கொத்து தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இங்கு பாண் மற்றும் பிட்டு வைத்து கொத்து செய்கின்றார்கள். மேலும் மீன், முட்டை, கணவாய், முட்டை, பாபத் கறி மற்றும் பல கறிகள் உள்ளன. பரோட்டாவை 3 சுவைகளில் சமைத்து விற்கின்றார்கள். அதிலும் இந்த கடையின் மெனுவை பார்த்தால் நாக்கு துள்ளிக்குதிக்கும்.
கிரிஸ்பி சிக்கன் சண்ட்விச்
பொதுவாக சென்விட்ச் என்றால் முட்டை வைத்து மற்றும் தான் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த கடையில் சண்ட்விச் நடுவில் முட்டை, கிறிஸ்பி சிக்கன் போன்றவையும் சேர்த்து சலாது, கோவா, வெங்காயம் போன்றவை இருக்கும். இவ்வளவு பொருட்கள் இருப்பதால் விலை அதிகம் இருக்கும் என்று நினை்ன வேண்டாம். இலங்கை பணப்பெறுமதிக்கு 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய்தான் இருக்கும்.
இது தவிற வேறு என்ன இருக்கும்?
-
சப்மரீன், பர்கர்
- சூப் வித் சமோசா
- டேஸ்ட்டி BBQ
- கொத்து, ரைஸ், பரோட்டா, இடியப்பம்
- கூலிங் பாதாம் பால்
செல்லும் முறை
Google map இல் Aluthkade பொலிஸ் என்று தேடிச் சென்றால் அங்கிருந்தே ஆரம்பிக்கும் இந்த உணவுக்கடைகள். புதுக்கடை நீதிமன்றத்தில் இருந்து நேராக சென்று வலதுபுறம் திரும்பும் வீதியில் சென்றாலும் இந்த புதுக்கடை கடைத்தெருவிற்குள் செல்லலாம். இங்கு சாப்பாட்டிற்கு பஞ்சமில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |