மேலும் 5 சிறார்களை பலிவாங்கிய தொற்று: பிரித்தானியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை வெளியானது
பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு மேலும் 5 சிறார்கள் பலியாகியுள்ள நிலையில், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்லெட் காய்ச்சல்
பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் Strep A பாதிப்பு மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் செப்டம்பர் 12ம் திகதிக்கு இன்னர் Strep A பாதிப்பு காரணமாக சிறார் உட்பட 94 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. Strep A பாதிப்பு பொதுவாக காணப்படுவதாக இருந்தாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்கார்லெட் காய்ச்சலுக்கு 27,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2017 மற்றும் 2018 காலகட்டத்தில் ஸ்கார்லெட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,287 என்றே பதிவாகியுள்ளது.
மொத்தம் 355 பேர்கள்
அத்துடன், Strep A பாதிப்பினால் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் 27 பேர்களுடன் மொத்தம் 355 பேர்கள் 2017 மற்றும் 2018ல் இறந்துள்ளனர்.
Credit: Solent
குளிர்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்றினை வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் எனவும் லேசான அறிகுறிகள் தென்பட்டாலும், பெற்றோர்கள் கவனம் எடுத்துக் கொள்வதால் சிக்கலின்றி குணப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.