பயணிகளிடம் கடுமை... ஃபெடரல் அரசாங்கத்தை விமர்சிக்கும் சுவிஸ் மாநிலங்கள்
சுவிட்சர்லாந்தில் வரும் வெளிநாட்டவர்களுக்கு இருமுறை கொரோனா சோதனை கட்டாயம் என்ற ஃபெடரல் அரசாங்கத்தின் கட்டுப்பாடு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக மாநிலங்கள் முறையிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்துக்குள் உள்ளூர் அல்லது வெளிநாட்டவர்கள் யார் நுழைந்தாலும் PCR சோதனை முன்னெடுத்த தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 4 முதல் 7 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது கொரோனா சோதனை முன்னெடுத்து, பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறித்த புதிய விதியானது டிசம்பர் 4ம் திகதியில் இருந்தே சுவிட்சர்லாந்தில் அமுலில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது அந்த விதியின் பின்னால் இருக்கும் சிக்கலால், பல மாநிலங்கள் ஃபெடரல் நிர்வாகத்திடம் முறையிடத் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு மாநில எல்லையிலும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தும் நிலையை ஃபெடரல் நிர்வாகம் இன்னும் ஒழுங்குப்படுத்தாத நிலையில், ஃபெடரல் நிர்வாகம் அளிக்கும் தரவுகளை மட்டுமே மாநில நிர்வாகங்கள் ஒப்பிட்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது அதிக சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ள மாநில நிர்வாகங்கள், சில பயணிகள் தாங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறோம் என்பதையே திருத்துவதாகவும், தவறான தகவலை அளிப்பதால், அவர்களை கண்காணிக்க முடியாமல் போவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.