இன்று முதல் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் அறிமுகம்
சுவிட்சர்லாந்துக்குள் நுழைய, இன்று (20.9.2021) முதல், கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
சுவிட்சர்லாந்துக்கு வருவோர், தங்களிடம் கொரோனா பாஸ் இல்லாத பட்சத்தில், கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுவதுடன், நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அந்த பரிசோதனையின் முடிவுகளை சம்பந்தப்பட்ட மாகாண அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
இரண்டாவது கொரோனா பரிசோதனையை செய்துகொள்ளாதவர்களுக்கு 200 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படும்.
சுவிட்சர்லாந்துக்கு வரும் அனைத்து பயணிகளும், சுவிட்சர்லாந்துக்கு வரும் முன், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க உதவும் ஆவணம் ஒன்றை நிரப்பவேண்டும்.
அதே நேரத்தில், இந்த கட்டுப்பாடுகள் எல்லைப் பகுதியில் வாழ்பவர்களுக்கு பொருந்தாது என்றும், அதனால் எல்லை தாண்டி பணிக்கு வரும் பணியாளர்களும், ஷாப்பிங் வருபவர்களும் கூடுதல் ஆவணங்களை நிரப்பவேண்டியதில்லை என்றும் சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.