உயர் எச்சரிக்கையில் பாரிஸ் நகரம்... முக்கிய பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம்

Emmanuel Macron Paris
By Arbin Oct 14, 2023 04:29 PM GMT
Report

பாரிஸ் நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், லூவ்ரே மற்றும் வெர்சாய்ஸ் அரண்மனை பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பாரிஸ் நகரம் உயர் எச்சரிக்கையில்

மட்டுமின்றி, Gare de Lyon ரயில் நிலையத்தில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாரிஸ் நகரம் முழுவதும் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

உயர் எச்சரிக்கையில் பாரிஸ் நகரம்... முக்கிய பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம் | String Of Bomb Threats Paris On High Alert

வெள்ளிக்கிழமை பாடசாலை ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தை அடுத்தே நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல், லூவ்ரே அருங்காட்சியகத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்க விடப்பட்டது.

அதன் சுரங்கப்பகுதி வணிகவளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

லூவ்ரே நிர்வாகிகள் தரப்பு தெரிவிக்கையில், குறித்த சம்பவத்தில் எவரும் காயம்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து பாரிஸ் நகர பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டனர்.

உயர் எச்சரிக்கையில் பாரிஸ் நகரம்... முக்கிய பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம் | String Of Bomb Threats Paris On High Alert @afp

அத்துடன், அருங்காட்சியகம் மொத்தமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனிடையே, வெர்சாய்ஸ் அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

முகமது என்ற செச்சென் அகதி

இதனையடுத்து, பார்வையாளர்கள் மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாடசாலை தாக்குதல் சம்பவத்தை அடுத்து 7,000 ராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்டனர்.

மத அடிப்படைவாதி இளைஞர் ஒருவரால் Dominique Bernard என்ற ஆசிரியர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்டார். பிரான்சில் நடந்த கொடூரமான இந்த சம்பவம் தற்போது பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு பொலிசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

உயர் எச்சரிக்கையில் பாரிஸ் நகரம்... முக்கிய பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம் | String Of Bomb Threats Paris On High Alert @afp

மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரினால் பிரான்சில் இதுப்போன்ற தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அஞ்சப்படுகிறது. 20 வயதான தாக்குதல்தாரி ஐ.எஸ் ஆதரவு இளைஞர் எனவும், முகமது என்ற செச்சென் அகதி எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US