பள்ளி கழிப்பறையில் ரத்தக் கறை.., மாதவிடாய் சந்தேகத்தால் மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை
பள்ளி மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்ததாக கூறி முதல்வர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகளிடம் சோதனை
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, தானே மாவட்டம் ஷகாபூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்குள்ள மாணவிகளின் கழிப்பறையில் ரத்தக் கறை இருந்துள்ளது.

PNB வங்கியில் ரூ.50 லட்சத்திற்கு மேல் வீட்டுக்கடன் வாங்குவோருக்கு processing fees 100 சதவீத தள்ளுபடி
இதுகுறித்து, தனியார் பள்ளியின் முதல்வர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். மாதவிடாய் காலத்தில் யாரெல்லாம் இருக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், மாணவிகள் யாரும் பதில் அளிக்கவில்லை.
உடனே ஆத்திரமடைந்த முதல்வர் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 125 மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு, பெண் ஊழியர் ஒருவர் மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை செய்துள்ளார்.
பின்னர், நடந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் மாணவிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, ஏராளமான மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பொலிஸார் விரைந்து வந்து விசாரணையும் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, பெற்றோர், மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் பள்ளி முதல்வர், 4 ஆசிரியர்கள், 2 நிர்வாகிகள், பெண் ஊழியர் என 8 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும், பள்ளி முதல்வர் மற்றும் பள்ளியின் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |