பிரித்தானியா, அயர்லாந்தை தாக்கிய புயல் ஏமி: லட்சக்கணக்கான மக்கள் இருளில் தவிப்பு
புயல் ஏமி பிரித்தானியா மற்றும் அயர்லாந்தை பயங்கரமாக தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை தாக்கிய புயல் ஏமி
சூறாவளி காற்று மற்றும் பலத்த கனமழையுடன் பிரித்தானியா மற்றும் அயர்லாந்தை ஏமி புயல் கடுமையாக தாக்கியுள்ளது.
இந்த புயலின் காரணமாக ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளனர்.
புயல் ஏமியானது அதிகபட்சமாக ஸ்காட்லாந்தில் உள்ள டயரீயில்(Tiree) 96 மைல் வேகத்தில் வீசியதாக மெட் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ச்சியாக வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
பிரித்தானியா முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதே சமயம் ஸ்காட்லாந்தின் வடக்கு பகுதியில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசி சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |