கனடா எல்லை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சாலைக்கு ஓடிய மக்கள்
வடஅமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு இடையே அமைந்துள்ள யுகோன் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கனடா எல்லை அருகே நிலநடுக்கம்
அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் தகவல்படி, அலாஸ்காவின் ஜூனாவ் வில் இருந்து வடமேற்கே சுமார் 370 கி.மீ தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணியளவில், 7.0 ரிக்டர் அளவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |