புடினுடைய இரகசிய காதலி சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கு கடும் எதிர்ப்பு: சரி, உண்மையில் அவர் எங்கே இருக்கிறார்?
புடினுடைய இரகசிய காதலி சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், உண்மையில் அவர் எங்கே வாழ்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
புடினுடைய இரகசிய காதலி என்று கூறப்படும் Alina Kabaeva (38), சுவிட்சர்லாந்தில் மறைந்திருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், ஒலிம்பிக் தடகள வீராங்கனையான Alina, சமீபத்தில் மாஸ்கோவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளின்போது புதிய தோற்றத்துடன் தோன்றி பிரமிக்கச் செய்தார்.
ஆக, அவர் எங்கே வாழ்கிறார், அவர் உண்மையாகவே சுவிட்சர்லாந்தில்தான் வாழ்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்தே, ஏன் புடினுடைய அரசுக்கு உதவுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறாய்? என்ற தலைப்பின் கீழ் சுவிட்சர்லாந்தில் ஒரு புகார் மனு உருவாக்கப்பட்டது. அது உடனடியாக Alinaவை சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேற்ற வலியுறுத்துகிறது.
அந்த மனுவில் இதுவரை 70,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.
ஆனால், உண்மையில் Alina எங்கே வாழ்கிறார்?
Alina, சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணத்திலுள்ள ஒரு பாதுகாப்பான மாளிகையில் வாழ்வதாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், அமெரிக்க அதிகாரிகளோ, Alina ஜெனீவாவிலுள்ள புறநகர்ப்பகுதியான Cologny என்ற இடத்தில் ஹெலிகொப்டர்கள் இறங்கும் வசதி கொண்ட ஒரு மாளிகையில் வாழ்வதாக தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், சுவிஸ் ஊடகமான 20 Minutes, சுவிஸ் புலம்பெயர்தல் அதிகாரிகளின் கூற்றின்படி, சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கான வாழிட அனுமதி Alinaவுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.
Alina சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேற்றப்படுவாரா?
Alina சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேற்றப்படுவாரா என்பதை விட, முதலில் Alina சுவிட்சர்லாந்தில்தான் வாழ்கிறாரா என்பதே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவர் தற்போது சுவிட்சர்லாந்திலேயே இல்லை என பெடரல் நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அப்படியே Alina உண்மையாகவே சுவிட்சர்லாந்தில் இருந்தால், அவர் சட்ட விரோதமாக சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பதாக முடிவு செய்யப்பட்டாலோ, அல்லது அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கருதப்பட்டாலோ, அல்லது அவர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டாலோ, அவர் நாடுகடத்தப்படலாம்.
அத்துடன், அவரது குடியுரிமை நிலையையும் கருத்தில் கொண்டுதான் Alina நாடுகடத்தப்படுவாரா என்பதும் நடைமுறையில் முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022