என் மனைவிக்கு என்னைவிட அவரைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு : சீக்ரெட் சொன்ன ஸ்டூவர்ட் பிராட்
என் மனைவிக்கு என்னைவிட கிறிஸ்வோக்ஸைதான் ரொம்ப பிடித்திருக்கிறது என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
ரகசியம் சொன்ன ஸ்டூவர்ட் பிராட்
அவுஸ்திரேலிய அணி தற்போது இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சிலும், துடுப்பாட்டத்திலும் அசத்தினார்.
இந்நிலையில், என் மனைவிக்கு என்னைவிட கிறிஸ் வோக்ஸைதான் ரொம்ப பிடித்திருக்கிறது என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில்,
என் மனைவி மோலிக்கு என்னை விட கிறிஸ்வோக்ஸைதான் பிடிக்கும். அவர் அற்புதமான கிரிக்கெட்டர் என்று கூறும்போது, நான் இல்லையா என்று கேட்டேன். அதற்கு என் மனைவி நீங்கள் இரண்டாவது ஆளுதான். முதல் இடத்தில் அவர்தான் என்று கூறினார். என் உடனே ரொம்ப தேங்க்ஸ் என்றேன். 2 உலக கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற உதவி செய்தவரே அவர்தான். மேலும், 3-வது ஆஷஸ் போட்டியில் சூப்பராக விளையாடினார் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |