Viral Video: கடைசி போட்டியிலும் தொடர்ந்த சம்பிரதாயம், கைகொடுத்த அதிர்ஷ்டம்
நடந்து முடிந்த ஆஷஸ் தொடருடன் தான் ஓய்வுபெற போவதாக அறிவித்திருந்த இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் கடைசி பந்தில் பேட்டிங்கில் சிக்சரும், பந்துவீச்சில் விக்கெட்டும் எடுத்து இந்த போட்டியை வெற்றியுடன் தனது கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்திருக்கிறார்.
முப்பத்து ஏழு வயது வீரரான பிராட் 18 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடி டெஸ்டில் மட்டும் 604 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஒரு வேகப்பந்து வீச்சாளர் இவ்வளவு வருடம் தொடர்ந்து விளையாடுவது மிகவும் அபூர்வமே.
இவரது இந்த நீண்ட கிரிக்கெட் பயணத்தில் ஒரு சம்பிரதாயத்தை தொடர்ந்து செய்துள்ளார்.
அதை தனது கடைசி விக்கெட்டை கைப்பற்றும் முன்னும் செய்துள்ளார் என்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் கடைசிப் போட்டியின் கடைசி நாளில் ஆஸ்திரேலியா ஒன்பது விக்கெட் இழக்க இங்கிலாந்து வெற்றிக்கான கடைசி விக்கெட்டை நீண்ட நேரம் எடுக்க முடியாமல் இருந்தது.
அப்போது 91வது ஓவரின் ஐந்தாவது பந்தை வீசுவதற்கு முன் பிராட் ஸ்டம்பில் உள்ள பெய்ல்ஸ் இரண்டையும் எடுத்து இடத்தை மாற்றி வைத்தார்.
I guess swopping the bails trick works #ENGvsAUS #Ashes #Broad #Cricket pic.twitter.com/s2HC6nxZAB
— Paul Adams (@PaulAdams39) July 31, 2023
இதை பார்த்துக்கொண்டிருந்த வர்ணனையாளர் நாசர் ஹுசைன் "பெய்ல்ஸை மாற்றுவதால் அவர் அதிர்ஷ்டம் மாறலாம்" என கூறினார்.
இதைத்தொடர்ந்து பிராட் வீசிய அந்த பந்தில் மர்பி விக்கெட்டை எடுத்து இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்த தொடர் ட்ராவில் முடிவடைந்திருந்தாலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை வென்றிருந்ததால் கோப்பையை அவர்களே தக்கவைத்துக் கொண்டனர்.
இந்த சம்பிரதாயத்தை நீண்ட காலமாகவே செய்து வருகிறார் பிராட். இந்த போட்டி முடிந்த பிறகு பேசுகையில் "ஆஷஸ் தொடரின் கடைசி பந்தில் விக்கெட் எடுத்து வெற்றியுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்வது அருமையாக உள்ளது" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |