555 விக்கெட்டுகள்! ஒற்றைக் கையில் கேட்ச்.. 36 வயதில் மிரட்டும் வீரர்
ஸ்டூவர்ட் பிராட் 157 டெஸ்ட் போட்டிகளில் 555 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
36 வயதாகும் பிராட் அதிக டெஸ்டுகள் விளையாடிய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஒற்றையில் அபாரமாக கேட்ச் பிடித்து மிரட்டினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Oh Broady! ?
— England Cricket (@englandcricket) August 19, 2022
Live clips: https://t.co/2nFwGblL1E
??????? #ENGvSA ?? | @StuartBroad8 pic.twitter.com/SCkwjfD7g5
இதன்மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 555 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் அவர் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பீல்டிங்கிலும் அசத்திய பிராட், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா அடித்த ஷாட்டை ஒற்றைக் கையால் தாவிப்பிடித்தார்.
Stuart Broad ? Lord's
— Lord's Cricket Ground (@HomeOfCricket) August 18, 2022
100 Test wickets at the Home of Cricket for @StuartBroad8 ?#LoveLords | #ENGvSA pic.twitter.com/kqW19mKJyz