அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்..ருத்ர தாண்டவமாடி 76 ரன் விளாசிய வீரர்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 175 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டிரினிடாட்டில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பாடியது.
Shamar Joseph joins the wicket party at Brian Lara Cricket Stadium!
— Windies Cricket (@windiescricket) August 23, 2024
Another wicket down!#WIvSA | #T20Fest pic.twitter.com/njUewjLd86
ஷாமர் ஜோசப் (Shamar Joseph), மேத்யூ போர்டேயின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த தென் ஆப்பிரிக்கா, 42 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
அப்போது இளம் வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார். சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட அவர் அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஸ்டப்ஸுக்கு துணையாக அதிரடி காட்டிய பாட்ரிக் க்ரூகர் 32 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
ஸ்டப்ஸ் 42 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா 174 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் மேத்யூ போர்டே 3 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Scintillating Stubbs!☄️
— Proteas Men (@ProteasMenCSA) August 23, 2024
Tristan brought the magic with a crucial knock in the middle.????#WozaNawe #BePartOfIt#SAvWI pic.twitter.com/UXjClNawmb
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |