சூப்பர்மேனாக மாறிய இளம் வீரர்! ஒற்றைக் கையால் தாவிப் பிடித்த கேட்ச்..வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து வீரர் மொயீன் அலியின் கேட்சை, தென் ஆப்பிரிக்காவின் ஸ்டப்ஸ் ஒற்றைக் கையால் தாவிப் பிடித்த வீடியோ வைரலாகியுள்ளது.
சௌதம்டனில் நடந்த கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்தை 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம் 10வது ஓவரை வீசினார்.
கடைசி பந்தை எதிர்கொண்ட மொயீன் அலி ஷாட் அடித்தபோது, தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வீரரான ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அபாரமாக தாவிச் சென்று, ஒற்றைக் கையால் கேட்ச் செய்து மிரட்டினார்.
இதனால் உறைந்துபோன மொயீன் அலி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
Tristan Stubbs - the Superman! pic.twitter.com/XNT8wWIbSh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 31, 2022