அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவர்: 1,00,00,000 நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படத்தில் வரும் ஒரு காட்சியால், பொறியியல் மாணவர் ஒருவர் சங்கடங்களை சந்தித்து வருவதால் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
'அமரன்'
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தீபாவளியன்று வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவியின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவியும் அதேவேளையில், இப்படம் சுமார் 300 கோடியை வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் அமரன் படத்தில் வரும் ஒரு காட்சியினால் பொறியியல் மாணவர் ஒருவர் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார்.
மனஉளைச்சல் அடைந்த மாணவர்
அதாவது, படத்தில் வரும் ஒரு காட்சியில் சாய் பல்லவியின் செல்போன் எண் காட்டப்பட்டிருக்கும். அது அவருடைய உண்மையான செல்போன் எண் என நினைத்து பலரும் அந்த எண்ணுக்கு போன் செய்து வாழ்த்து கூறியுள்ளனர்.
அத்துடன் வாட்ஸ்அப்பிலும் தொடர்ந்து பலரும் அந்த எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் அந்த எண் பொறியியல் மாணவர் ஒருவருடையது.
குறித்த மாணவர் தொடர்ச்சியான அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனால் அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது குறித்த மாணவர் பட நிறுவனத்திடம் இருந்து ரூ.1.1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், "படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து வரும் அழைப்புகளால் என்னால் தூங்கவோ, படிக்கவோ, மற்ற வேலைகளை செய்யவோ முடிவதே இல்லை" என வேதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |