விமான நிலைய கழிவறையில் குழந்தை பெற்றுக்கொண்டு குப்பை தொட்டியில் வீசிய மாணவி
மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் இருந்துள்ளது.
மாணவியின் கொடூர செயல்
மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறை குப்பை தொட்டியில் குழந்தையின் உடல் கிடந்ததை பார்த்த துப்புரவு தொழிலாளி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் 4 நாட்களுக்கு முன்பாக நடந்தது.
பின்னர், இது தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கழிவறையில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண் யார் என்பது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் ராஞ்சி சென்ற விமானத்தில் ஏறிச்சென்ற 16 வயது மைனர் பெண் ஆவார். அதாவது விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரம் முன்பாகவே அந்த பெண்ணும் அவரது தாயாரும் விமான நிலையத்திற்கு வந்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "மைனர் பெண்ணிற்கு விமான நிலையத்தில் வைத்தே வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கழிவறைக்கு சென்றபோது குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர், குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் போடுவதற்கு அப்பெண்ணின் தாயார் உதவி செய்துள்ளார். இதையடுத்து, அப்பெண்ணின் காதலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கழிவறையில் குழந்தையை பெற்றுக்கொண்டு ஆடையை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர்" என்றார்.
மேலும் பெண்ணின் தாயார் கூறுகையில், "`தனது மகள் 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியும். இதனால் தான் உறவினர் வீட்டுக்கு செல்ல ரயிலில் செல்லாமல் விமானத்தில் சென்றோம்" என்றார்.
இதையடுத்து, இருவரிடம் வாக்குமூலம் வாங்கிக்கொண்டு அவர்களை வீட்டுக்கு செல்ல பொலிஸார் அனுமதித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |