குங்குமம் வைத்து வந்த மாணவர்! பள்ளியில் வெடித்த மோதல்
பள்ளிக்கு குங்குமம் வைத்து வந்த இந்து மாணவனை, முஸ்லீம் மாணவர்கள் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குங்குமம் வைத்ததால் மாணவர்களிடையே மோதல்
இந்திய மாநில ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள அரசுப் பள்ளியில் சுபம் ராஜ்புட் என்ற மாணவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த வியாழக்கிழமை அன்று , நெற்றியில் குங்குமம் வைத்து பள்ளிக்கு வந்துள்ளார்.
அப்போது, பள்ளியில் உள்ள சில முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குங்குமத்தை அழிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அந்த மாணவர் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது மற்ற மாணவர்கள் சரமாரி தாக்கியதில் சுபம் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுபத்தின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். இருப்பினும், அவர்களையும் மதம் மாறச் சொன்னதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
500க்கும் மேற்பட்ட பொலிசார் குவிப்பு
பள்ளியில் குங்குமத்துடன் காணப்பட்ட சுபம், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு சிறுவர்களைக் கொண்ட குழுவால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சுபத்தின் உறவினர்களும், வலதுசாரி அமைப்பினரும் பள்ளிக்கு வெளியே கூடினர். அதேசமயம், எதிர்தரப்பினரும் கூடினர்.
இந்நிலையில், இரு சமூகத்தினருக்கும் இடையே மேலும் பதற்றம் ஏற்படாமல் தடுக்க கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டனர். சோமா கிராமத்தில் மாணவர்களின் பெற்றோரும் மோதிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சுபமின் பெற்றோர் புகார்
பின்னர் , இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் சுபமின் பெற்றோர் புகார் அளித்தனர். மேலும், சுபம் அளிக்க முயன்றபோது அவரைத் தாக்கி, அவரது நெற்றியில் இருந்த குங்குமத்தை வலுக்கட்டாயமாக அகற்றியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் ஜெய் அஹுஜா குற்றம் சாட்டினார். மேலும் அவர், சுபம் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் சுபமை தனது குடும்பத்தினருடன் இஸ்லாமியத்திற்கு மாறுமாறு கேட்டுக் கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |