AI மூலம் வேக ரேடாரை உருவாக்கி ரூ.3 கோடிக்கு விற்ற 20 வயது மாணவன்
Chatgpt, Claude போன்ற AI செயலிகள் மூலம், கோடிங் எழுதுவது போன்ற மனிதர்கள் பல மணி நேரம் செய்யும் வேலையை சில நிமிடங்களில் செய்ய முடிகிறது.
இந்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்தவர்கள் அதன் மூலம் தயாரிப்புகளை உருவாக்கி பணம் ஈட்டி வருகின்றனர்.
AI மூலம் வேக ரேடாரை உருவாக்கிய 20 வயது மாணவன்

இதே போல் சீனாவை சேர்ந்த 20 வயது மாணவர், கிளாட் ஏஐ (Claude AI) மென்பொருளைப் பயன்படுத்தி வெறும் 9 நாட்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் வேக ரேடாரை உருவாக்கியதாக எக்ஸ் (X) தளத்தில் வைரலான பதிவு ஒன்று தெரிவித்துள்ளது.
AI is getting ridiculous...
— Min Choi (@minchoi) July 6, 2026
A 20-year-old student in China reportedly built an AI speed radar with Claude.
9 days. Old camera. $20 in API calls.
Then allegedly sold it to a city district for $317K. pic.twitter.com/79j7xvCIT7
API அழைப்புகளுக்காக வெறும் 20 டொலர் மற்றும் பழைய கேமராவை பயன்படுத்தி உருவாக்கிய இந்த தயாரிப்பை 3,17,000 டொலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.3 கோடி) நகர மாவட்டத்திற்கு விற்றதாக தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த ரேடார் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த எந்த தகவலும் அந்த பதிவில் இடம்பெறவில்லை. இந்த ரேடாரின் துல்லியம் என்ன? இதனை ஏன் அவர்களே உருவாக்குவது இல்லை? அவர் காப்புரிமையை விற்றாரா அல்லது அந்தத் தனிப்பட்ட சாதனத்தையே விற்றாரா? என பயனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |