சுவிஸ் ஆய்வகத்தில் பணி செய்யும்போது வெளிநாட்டு மாணவிக்கு நேர்ந்த துயரம்
சுவிட்சர்லாந்தில் கல்வி பயில வந்த ஒரு வெளிநாட்டு மாணவி, ஆய்வகத்தில் பணி செய்யும்போது தனக்கு எச் ஐ வி தொற்றியதாக கூறியுள்ள நிலையில், அவருக்கு இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட பல்கலை முடிவு செய்துள்ளது.
மாணவிக்கு நேர்ந்த துயரம்
ஜெனீவா பல்கலையில் பயின்றுவந்த இத்தாலி நாட்டு மாணவி ஒருவர், தான் ஆய்வகத்தில் பணியாற்றும்போது தனக்கு எச் ஐ வி தொற்றியதாக புகாரளித்திருந்தார்.
இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தப் பிரச்சினையை முடித்துவைக்கும் வகையில், அந்த மாணவிக்கு இழப்பீடு வழங்குவது என பல்கலை முடிவுசெய்துள்ளது.
அதன்படி அவருக்கு 140,000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த மாணவி, தனது ஆய்வுக்கட்டுரைக்காக, ஜெனீவா பல்கலையிலுள்ள ஆய்வகத்தில், எய்ட்ஸ் வைரஸ் தொற்றியவர்களின் இரத்த மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |