கல்லூரி முடிந்து சகோதரியை அழைத்து வர சென்ற போது நேர்ந்த சோகம்
தமிழக மாவட்டம், கோவையில் தனியார் பேருந்து ஒன்று பைக்கில் மோதிய விபத்தில், மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் சஞ்சீவி (20). இவர், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை கல்லூரி முடிந்து சின்னியம்பாளையத்தில் உள்ள தனது சகோதரியை அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, சாலையில் முன்னால் நடந்து சென்றவரை முந்தி செல்ல முயன்றுள்ளார். அந்த நேரத்தில், பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பைக்கின் மீது மோதியது.
மாணவர் உயிரிழப்பு
இதில், நிலை தடுமாறி விழுந்த மாணவர் சஞ்சீவி பேருந்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளார். அப்போது, அவரது தலை நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலிருந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய தனியார் கல்லூரி பேருந்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |