உயிரைப் பறிக்கும் கடும் குளிர்... உடல் உறைந்து சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவர்
மிச்சிகன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உறைய வைக்கும் கடும் குளிரில் டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் மட்டுமே அணிந்து நடக்கச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
15 மணி நேரம்
19 வயதேயான லூகாஸ் மேட்சன் என்பவர் கடும் குளிரில் சுமார் 15 மணி நேரம் காணாமல் போயுள்ளார். அவரது சடலம் சனிக்கிழமை நண்பகல் டெட்ராய்டுக்கு வெளியே ஆன் ஆர்பரில் உள்ள தெருவில் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் மிச்சிகன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல் போனதாகவும், கடும் குளிரடிக்கும் சூழ்நிலை காரணமாக அவர் ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படுவதாகவும் பொலிசார் எச்சரிக்கை விடுத்தனர்.
அந்தப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வெப்பநிலை ஜீரோ ஃபாரன்ஹீட்டை எட்டியது. அடுத்த நாள் சனிக்கிழமை அமெரிக்காவை குளிர்கால புயல் ஃபெர்ன் தாக்கியது, மிச்சிகன் உட்பட 34க்கும் மேற்பட்ட மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் ஆபத்தான நிலைமைகளைக் கொண்டு வந்தது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஹில் ஸ்ட்ரீட்டின் 1700 பிளாக்கில் மேட்சன் கடைசியாக டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து தனியாக நடந்து சென்றதாக ஆன் ஆர்பர் பொலிசார் தெரிவித்தனர்.
அன்று மாலை 4.30 மணிக்கு அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது, மேலும் அதிகாரிகள் இரவு முழுவதும் கல்லூரி மாணவனைத் தேடினர், ஆனால் அவர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், அவர் கடைசியாக காணப்பட்ட இடத்திலிருந்து அரை மைலுக்கும் குறைவான தொலைவில், கேம்பிரிட்ஜ் சாலையின் 1900 பிளாக்கில் காணாமல் போன 15 மணி நேரத்திற்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மின்சாரம் இல்லாமல்
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், அவர் வன்முறைக்கு இலக்கானதாக எந்த அடையாளமும் இல்லை என்றும், கொலை குறித்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் குளிர்கால புயலால் இதுவரை 17 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடும் பனிப்பொழிவு காரணமாக பல ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூயார்க், டென்னசி, லூசியானா, மாசசூசெட்ஸ், கன்சாஸ், பென்சில்வேனியா மற்றும் டெக்சாஸில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
10,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன, நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |