காதலியை சூட்கேசில் மறைத்து விடுதிக்கு கொண்டு சென்ற மாணவர்
ஹரியானா மாநிலத்தில் ஓ.பி.ஜிண்டால் பல்கலைகழகம் இயங்கி வருகிறது.
பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ஒருவர், சூட்கேஸ் ஒன்றை விடுதி கொண்டு வந்துள்ளார்.
சூட்கேஸ் உள்ளே காதலி
மாணவர் சூட்கேஸை தூக்க முடியாமல் தூக்கி வருவதை பார்த்து சந்தேகம் அடைந்த விடுதி காவலர்கள், சூட்கேசை திறந்துள்ளனர்.
அப்போது சூட்கேஸ் உள்ளே இருந்து இளம்பெண் ஒருவர் வெளியே வந்ததை பார்த்து, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில், அந்த பெண் மாணவரின் காதலி எனவும், காதலியுடன் நேரம் செலவிடுவதற்காக அவரை சூட்கேசில் மறைத்து வைத்து, தனது விடுதி அறைக்கு மாணவர் கொண்டு செல்ல முயன்றுள்ளார் என தெரியவந்தது.
இது அங்கிருந்த மாணவர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Guy tried Sneaking his Girlfriend into the Boys hostel in a Suitcase.. one Bump and she screamed from inside. guards Heard it and they got Caught, Op Jindal Uni
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 12, 2025
pic.twitter.com/xBkBTYymdt
பல்கலைகழகத்தில் கடுமையான சோதனைகள் இருந்தாலும், மாணவர்கள் இது போன்று விளையாட்டாக ஏதாவது செய்து விடுகிறார்கள் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |