காபி குடிக்க அழைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை! ஆசிரியரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்
இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீட் பயிற்சி ஆசிரியரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவியிடம் பாலியல் அத்துமீறல்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நீட் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு, விவேக் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர், அங்கு படித்து வரும் 17 மாணவி ஒருவரை படிப்பு சொல்லி தருவதாக கூறி காபி குடிக்க ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றார். அந்த மாணவி ஆசிரியர் கூறுவதை நம்பி அவருடன் சென்றுள்ளார்.
அங்கு அவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், விவேக்குடன் பணியாற்றும் சக ஆசிரியரான சைலேந்திரா என்பவர், மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு இதனை பற்றி வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.
ஆசிரியரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்
இந்த சம்பவத்தை மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் நீட் பயிற்சி மையத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு ஆசிரியர் விவேக்கை பிடித்து அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலம் நடத்தினர்.
பின்னர், ஆசிரியரை பொலிஸில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, பொலிஸார் விவேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |